ஆடை படத்தின் ரீமேக்கில் கங்கனா ரணவத்

gangana ranavath
gangana ranavath

‘மேயாத மான்’ படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் ‘ஆடை’ படத்தை இயக்கினார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்தார். கடந்த ஜூலை 19ம் திகதி இப்படம் வெளியானது.

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிய இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் ரத்னகுமார் ஈடுபட்டுள்ளார்.

அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் கங்கனா ரணாவத், இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.