சந்தானத்தின் படத்தில் இணையும் சௌகார் ஜானகி

sougar gnanagi
sougar gnanagi

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வருகின்ற படத்திற்கு ‘வித்தைக்காரன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சௌகார் ஜானகி நடிக்கிறார். இந்த படம் இவருக்கு 400வது படமாகும்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதில் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கின்றன.

கமலுடன் நடித்த ‘ஹேராம்’ படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய சௌகார் ஜானகி தற்போது சந்தானம் படத்தின் மூலம் 400வது படத்தை தொட்டிருக்கிறார்.

இந்த படத்தில் சந்தானத்துடன் நடிக்க செளகார் ஜானகியை அழைத்த போது எனக்கு வயது ஆகிவிட்டது, அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக கூறியிருந்த நிலையில் படத்தின் கதை பிடித்துப் போக, உடனே நடிக்க சம்மதித்துள்ளார்.