கபடதாரியின் முக்கிய வேடத்தில் பூஜா குமார்

pooja
pooja

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ என்று புதிய படத்தில் ‘விஸ்வரூபம்’ படத்தின் வழியே கவனத்தை ஈர்த்த பூஜா குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவிக்கையில்

“கபடதாரி’ படத்தில் பூஜாகுமார் இணைந்திருப்பது, படத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் கதையை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு உயர்த்துவதுடன், பல திருப்பங்களையும், ஆச்சரியங்களையும் ஏற்படுத்தும்.

பூஜாகுமார் ‘விஸ்வரூபம்,’ ‘உத்தம வில்லன்’ மற்றும் ஆங்கில படங்களில் நடித்து இருப்பவர். அவருடன் பணியாற்றுவதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். படத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா கதையின் நாயகன்- நாயகியாக நடிக்க, நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே. ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் படப் பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது.”