ரஜினிகாந்திற்கு ICON OF GOLDEN JUBILEE விருது- மத்திய அரசு அறிவிப்பு

rajinikanth
rajinikanth

நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான “ICON OF GOLDEN JUBILEE” விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்
பிரகாஷ் ஜவடேகர்,

கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு இவ்விருது வழங்கப்படும் என்றும், விருது வழங்குவது தொடர்பாக ரஜினிகாந்துக்கு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

50வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இம்மாதம் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை நடைபெறுகிறது.

இவ்விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழம்பெரும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்பட உள்ளது.

இதில் தமிழில் வெளியான ஒத்தசெருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.