நவம்பர் 29ல் “எனை நோக்கி பாயும் தோட்டா”

thanush
thanush

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.

படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இந்த படம் பண நெருக்கடி, நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திட்டமிட்டபடி வெளியாகாமால் தள்ளிப்போனது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் கௌதம் மேனன் படத்தை நவம்பர் 15ம் திகதி வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது நவம்பர் 29ம் திகதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.