ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 2600 முறைப்பாடுகள்

Sri Lanka Election Commission
Sri Lanka Election Commission

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய சுமார் 2600 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த மாதம் 8 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய சுமார் 2553 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனுடன் சேர்த்து மொத்தமாக 2672 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாகவும் தேசிய தேர்தல் விசாரணைகளை முகாமைத்துவம் செய்யும் பிரிவிற்கு இதுவரை 811 தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த பிரிவின் மாவட்ட மட்ட அலுவலகங்களுக்கு இதுவரை 1742 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இந்த இரு பிரிவுகளுக்கும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான 24 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.