பீஜிங்கில் கொரோனா 2வது அலை

i3 28 1
i3 28 1

உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ள கொரோனாவின் 2 வது அலை சீன தலைநகர் பீஜிங்கில் வீசத் துவங்கி உள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த வருடம் இறுதியில் முதன்முதலாக கொரோனா பரவ துவங்கியது. சில வாரங்களுக்கு முன் வரை அது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அதன் இரண்டாவது அலை தலைநகர் பீஜிங்கில் வீசத் துவங்கி உள்ளது. பீஜிங்கில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் பரவ துவங்கிய கொரோனாவால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சந்தையில் பணிபுரிந்த 8 ஆயிரம் பணியாளர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.


கடந்த 6 நாட்களில் மட்டும் 137 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதியானது

இதையடுத்து அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக்கியுள்ளது. பீஜிங்கில் உள்ள பள்ளிகளை் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பீஜிங் விமானநிலையத்தில் 1,255 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.