மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்பட்டுள்ளது

Tamil News large 1914421
Tamil News large 1914421

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் சுமார் 3 ஆயிரம் நினைவு சின்னங்கள்,கோயில்கள் மூடப்பட்டன.
ஊரடங்கு படிப்படியாக விலக்கப்பட்டு, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன் ஒரு பகுதியாக, நூறு நாட்களாக அடைக்கப்பட்டிருந்த நினைவு சின்னங்களை இன்று முதல் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


அதன்படி சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் தாஜ்மஹால், இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன.
ஆனால் இவற்றை பார்க்க ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக, உலக அதிசயமான தாஜ்மஹாலை பார்க்க தினமும் சுமார் 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

கொரோனா தாக்கத்தை மனதில் கொண்டு, தாஜ்மஹாலை பார்க்க தினமும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தாஹ்மஹாலின் பளிங்கு கற்களை தொடக்கூடாது என்பன போன்ற ஏராளமான கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை விதித்துள்ளது.
தாஜ்மஹாலை சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காதல் சின்னத்தை பார்க்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது, சர்ச்சையை உருவாக்கியுள்ளது.