வெற்றிகரமாக நிறைடைந்துள்ள கொரோனா தடுப்பூசி பரிசோதனை!

Corona vaccines to be available by the end of 2020 1
Corona vaccines to be available by the end of 2020 1

உலக நாடுகளின் இக்கட்டான சூழ்நிலைக்கு ஒரோ தீர்வாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுவரும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை ஒக்டோபரில் மனிதர்களுக்கு செலுத்த உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உலகின் வல்லரசு நாடுகள் பலவும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் இவ் அறிவிப்பு ஏனைய நாடுகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Russia Plans Massive Coronavirus Vaccine from October – Sada El balad

இவ் அறிவிப்பை ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “ஒக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்த திட்டமிட்டிருக்கிறோம். கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை ஒக்டோபரில் போட திட்டமிடுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலகிளாவிய ரீதியில் கொரோனா தொற்று பாதிப்பில் நான்காவது இடத்தில் உள்ள ரஷியாவில் நேற்றைய தினம் 5,482 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,058 ஆக பதிவாகியுள்ளதுடன் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.