ரஷ்யாவின் புதிய தலைவராக மைக்கைல் மிஷூஸ்டின் நியமனம்

michael
michael

ரஷ்யாவின் புதிய பிரதமராக மைக்கைல் மிஷூஸ்டின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் புடீன் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் பிரதமராக பதவி வகித்து வந்த டிமிட்ரி மெத்வடேவ் தனது பதவியை இராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து புதிய பிரதமராக மைக்கைல் மிஷூஸ்டின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அதிபர் விளாடிமீர் புடீன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த டிமிட்ரி மெத்வடேவ் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.