நாளை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி

india vs australia
india vs australia

இந்திய – அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 2வது போட்டி நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.

நாளைய தினம் அணி வீரர்கள் தேர்வில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

முதலாவது போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி தொடரை சமன் செய்வதற்கு முனையும் அதேவேளை தொடரை கைப்பற்றுவதற்கு அவுஸ்ரேலிய அணி முனைப்புடன் செயற்படும்.

இரு அணிகளும் நாளை மோதுவது 139வது ஒருநாள் போட்டியில் மோதுகிறது. இதுவரை நடந்த 138 ஆட்டங்களில் இந்தியா 50-ல், அவுஸ்ரேலியா 78-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டி முடிவு இல்லை.