எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பும் இல்லை – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

fuel
fuel

வளைகுடாவில் நிலவுகின்ற பதற்ற நிலைமைகளின் மத்தியில் நாட்டுக்கு எரிபொருளினை இறக்குமதி செய்வதில் எந்தவித பாதிப்பும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசியம் ஏற்பட்டால் ஹம்பாந்தோட்டையில் உள்ள எரிபொருள் தாங்கியை பயன்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவிற்கும், ஈரானிற்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற தகவலினை அதிகாரிகள் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.