கலாமதி அரசாங்க அதிபராக வருவதை எதிர்க்கின்றார் வியாழேந்திரன்!

1 12
1 12

2018 ஆம் ஆண்டு சிவில் சமூகத்தினை சேர்ந்தவர்கள் என்னிடம் திரு பாஸ்கரன் அவர்களை அரசாங்க அதிபராக கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக சம்பந்தன் ஐயாவிடம் பேசிய போது அரசாங்க அதிபராக வேறு ஒருவரை தெரிவு செய்து விட்டோம் என கூறினார்.

அப்போது அந்த சிவில் சமூகத்தினை சார்ந்தவர்கள் கோபம் அடைந்தனர். கடந்த அரசாங்கத்தில் திறமையான நிருவாக அதிகாரி பாஸ்கரன் அவர்கள் வரமுடியாமல் போனது.

ஆகவே இந்த இடமாற்றத்தில் அரசாங்க அதிபர் நியமனத்திற்கு பாஸ்கரன் அவர்களது பெயரினை சந்திரகுமார் உட்பட நானும் முன்மொழிந்திருந்தோம், எங்களுக்கு தெரியாது வேறு நபர்களது பெயர்கள் முன்மொழியப்பட்டிருக்கின்றது என்று.

2018 இல் இருந்து புறந்தள்ளப்பட்ட ஒருவரை முன்னாள் அமைச்சர் வஜ்ஜிர அபேவர்தன கூட கூறி இருந்தார் அக்கா இருக்கும் போது தங்கச்சிக்கு திருமணம் செய்வது போல் இருக்கின்றது என்று.

இந்த நிலையில் அரசுக்கு ஆதரவு வழங்கும் கட்சியின் பிரமுகர்கள் வேறு சிலரது பெயர்களை கொண்டு போகின்றார்கள் என்பது எனக்கு தெரியாது.

எனக்கு கலாமதி அவர்கள் மீது எந்தவொரு கோபமோ தனிப்பட்ட விருப்பு வெறுப்போ கிடையாது,

சிலர் கட்சிக்கு ஆதரவாக இருந்து கொண்டு அரசாங்கத்தில் வேலைபார்த்து, ஊடகவியலாளர் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஒரு நபர், கலாமதி அரசாங்க அதிபராக வருவதை வியாழேந்திரன் எதிர்க்கின்றார் என தானே செய்தி போட்டு அதை தன்னுடைய முகநூலில் பகிர்ந்து இருக்கின்றார்.

முஸ்லிம் சார்பான ஒருவரை கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது, நான் கூறுகிறேன் இவ்வாறானவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,

முகநூலில் சிலருக்கு அண்ணன் உள்ளே இருக்கின்றார் எண்ட தைரியம் விரைவில் அடங்கும் என போட்டு இருக்கிறார், இவ்வாறானவர்களை கட்சியில் வைத்திருப்பது தவறு. வன்முறையை இவர் தூண்டுகின்றார்.

இவர் நான் உட்பட சம்பந்தன் ஐயாவை கூட முகநூலில் வாக்கு விகிதம் கேட்டு போட்டு இருக்கிறார், இனி அமெரிக்க ட்ரம், பராக் ஒபாமாவைக் கூட போடுவார். என அவர் மேலும் தெரிவித்தார்.