தோனி போல வீரர்களை தான் அவுஸ்ரேலியா தேடி வருகிறது

5d
5d

‘‘ஒருநாள் அணியில் பின் வரிசையில் இறங்கி தோனி போல ‘பினிஷிங்’ செய்யும் வீரர்களை தான் அவுஸ்ரேலியா தேடி வருகிறது,’’ என பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்தார்.

அவுஸ்ரேலியா மண்ணில் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி 13ம் திகதி சிட்னியில் நடக்கவுள்ளது. இதுகுறித்து அவுஸ்ரேலிய அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியது:

ஒருநாள் போட்டிகளில் கடைசிவரை களத்தில் நின்று ‘பினிஷிங்’ செய்து தருவதில் அவுஸ்ரேலிய அணியின் மைக்கேல் பெவன், மைக்கேல் ஹசி சிறந்தவர்கள். இவர்கள் நமது அணியில் இருந்தது அதிர்ஷ்டம் தான். இந்தியாவின் தோனியும் இவ்விஷயத்தில் ‘மாஸ்டர்’ தான். இங்கிலாந்து அணிக்காக பட்லர் இதைச் சரியாக செய்கிறார்.

இப்படி தோனி, பெவன் போல களத்தில் கடைசி வரை நீடித்து அணிக்கு வெற்றி தேடித்தரும் வீரர்கள் தான் ஆஸ்திரேலிய அணி தேடி வருகிறது எனக் கூறியுள்ளார் .