தேர்தல் ஒத்திவைப்பு: சஜித் நன்றி தெரிவிப்பு

2 gf
2 gf

கொரோனா வைரஸ் பரவிலின் காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் அச்சத்தில் இருக்கின்ற நிலையில் , பொதுத் தேர்தலை பிற்போடுவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ , தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மக்களுக்கு அரசாங்கம் நிவாரணப் பொதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நாட்டு மக்களின் நலன் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியதற்காக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தத் தீர்மானம் முன்னரே எடுக்கப்பட்டிருந்க வேண்டும். இருந்தபோதிலும் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. மக்களுக்கான பலத்தைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

கனடாப் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ அந்நாட்டு மக்களுக்கு நெருக்கடி நிலைமையைக் கருத்தில்கொண்டு நிவாரணப் பொதியொன்றை பெற்றுக் கொடுத்துள்ளார். இதேப் போன்ற நிவாரணப் பொதிகள் எம் நாட்டு மக்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் – என்றும் அவர் மேலும் கூறினார்.