சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / யாழில் புதிதாக எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை – யாழ் வைத்தியசாலை

யாழில் புதிதாக எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை – யாழ் வைத்தியசாலை

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக எவரும் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகவில்லை எனத் தெரிவித்துள்ள வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுமாறு பொது மக்களைக் கேட்டுள்ளார்.

உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்றுத் தாக்கத்தில் இலங்கையிலும் 100 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் யாழ்ப்பாணத்திலும் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கின்றார். இதனால் நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊடரங்கு தொடர் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதே வேளையில் கொரோனோ தொற்று தொடர்பில் பல்வேறு வதந்திகளும் பரபப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதற்கமைய கொரோனோ தொற்று சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரையில் 21 பேர் பரிசோதனை செய்து வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தற்போதும் சந்தேகத்தின் பேரில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் இதுவரையில் ஒருவர் கொரோனோ தொற்றுக்குள்ளாகியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை புள்ளிவிபரங்களை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டிருக்கின்றார்.

ஆகவே வதந்திகளை பரப்ப வேண்டாமென்று கேட்டுக் கொண்டுள்ள வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் பொறுப்பை உணர்ந்து செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மதுபான வகைகளை கடத்தியவர்கள் கைது

பொலீசார் வழங்கிய அனுமதி பத்திரத்தை (pass) பயன்படுத்தி போதைப்பொருள் உட்பட மதுபான வகைகளை கடத்தியவர்களை கைது ...