உள்ளூராட்சி சபைகளின் மூலம் நிவாரணப் பொதிகள் வழங்கல்! – அரசு தீர்மானம்

77 ed
77 ed

அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் உணவுத் தேவைக்கான நிவாரணப் பொதியை வழங்குமாறு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கு உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள்  அமைச்சர் ஜனக்க பண்டார ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்குத் தேவையான வழிகாட்டல்கள் அனைத்து உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன எனவும் அறிக்கை ஒன்றினூடாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து நாட்டில் தற்போது நிலவும் நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.