பிரபல ஜோதிடரின் ஜனாதிபதி தெரிவு?

gota sajith
gota sajith

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் பிரபல ஜோதிடர்களின் ஜோதிடத்திற்கமைய புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவதற்கு சாத்தியமில்லை என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பிரபல ஜோதிடர் நுமிந்த ஷாந்தசிறி டி சில்வா தெரிவிக்கையில்:

ஜோதிடத்தை மாற்ற முடியாது. எங்கள் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் வேட்பாளர்கள் தொடர்பிலும் ஜோதிடர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

இந்த தவறுகளை சரிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் யார் என்பது தொடர்பில் கூறவே ஜோதிடர்கள் சிலர் ஒன்றாக இணைந்துள்ளோம்.

நாங்கள் எந்தக் கட்சிக்கும் சார்பானவர்கள் அல்லது. நாங்கள் கற்ற ஜோதிடத்திற்கமையவே நாங்கள் சார்பாக செயற்படுவோம். அதற்கமைய சஜித்திற்கு, 2024ஆம் ஆண்டிற்கு பின்னரே ராஜயோகம் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.