ஊரடங்கை மீறிய 9,466 பேர் சிக்கினர்

1 dd 1
1 dd 1

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 9 ஆயிரத்து 466 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நேற்றுக்  (01) காலை 6 மணி முதல் இன்று (02) காலை 6 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியினுள் மட்டும் ஆயிரத்து 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இக்காலப்பகுதியில் 254 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் ஊரடங்குச் சட்டம் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (02) காலை வரையான காலப்பகுதியினுள் மொத்தமாக 9 ஆயிரத்து 466 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், 2 ஆயிரத்து 332 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.