ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். 928 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.
அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 3வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை அவுஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார்.
சகல துறை ஆட்டக்காரரிற்கான தரவரிசையில் மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டர் முதல் இடத்தில் நீடிக்கிறார்