ஜப்பானில் கப்பலில் சிக்கியுள்ள மக்களை மீட்ட அமெரிக்கா

33
33

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டுக்கு மக்களை மீட்டு, சொந்த நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளது அமெரிக்கா.

இதற்கமைய குறிப்பிட்ட சுமார் 300 அமெரிக்கர்களை, சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அழைத்துச் சென்றுள்ளது.

கப்பலில் இருக்கும் அமெரிக்கர்கள் சுமார் 400 பேரை மீட்க அமெரிக்கா 2 விமானங்களை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தது. எனினும் கப்பலில் இருக்கும் அமெரிக்கர்கள் சிலர், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலம் முழுமையாக முடிவடைந்த பின்னரே கப்பலில் இருந்து இறங்குவோம் என கூறி விட்டனர்.

அதேபோல், கொரோனா பாதிப்பு இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட அமெரிக்கர்கள் 40 பேர், ஜப்பானிலேயே சிகிச்சை பெற்று, குணமடைந்த பிறகே நாடு திரும்ப முடியும் என அமெரிக்கா கூறிவிட்டது.

இதனால் குறிப்பிட்ட சுமார் 300 அமெரிக்கர்கள் கப்பலில் இருந்து விடுவிக்க ஜப்பான் அனுமதி அளித்தது. இதற் கமைய குறித்த 300 அமெரிக்கர்கள் கப்பலில் இருந்து இறக்கப்பட்டு, பேருந்துகள் மூலம் தலைநகர் டோக்கியோவில் உள்ள விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை ஏற்றிக்கொண்டு 2 விமானங்களும் ஜப்பானில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டது.

 இந்த கப்பல் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ள காலகட்டம் நாளையுடன்   முடிகிறது. நேற்று முன்தின நிலவரப்படி குறித்த கப்பலில், 355 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது .