ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் பெங்களூர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி!

111111 2
111111 2

11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர்-ஒடிசா அணிகள் மோதின. இதில் பெங்களூர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணிக்காக சுனில் சேத்ரி 38-வது நிமிடத்திலும், சில்வா 79-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஒடிசா தரப்பில் டெய்லர் 71 நிமிடத்தில் கோல் அடித்தார்.

பெங்களூர் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்று, 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒடிசா அணி 5-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஒரு புள்ளியுடன் 10-வது இடத்தில் இருக்கிறது.