மாகாணசபை தேர்தல் குறித்து நாடாளுமன்றம் உரிய முடிவை எடுக்கவேண்டும்- தேர்தல் ஆணையாளர்

nimal punchihewa 800x400 1 300x150 1
nimal punchihewa 800x400 1 300x150 1

தொடர்ந்தும் தாமதமாகி வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் உரிய தீர்மானத்தை எடுக்கவேண்டும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிவேவ இதனை தெரிவித்துள்ளார்.

 இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் சென்றவேளை நாடாளுமன்றம் இது குறித்து தீர்மானிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட புதிய மாகாணசபைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள அதேவேளை மாகாணசபைகள் எல்லைகள் மீள்நிர்ணயம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிலலை இதன் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன் காரணமாக தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அனைத்து கரிசனைகளுக்கும் தீர்வை காணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது நீண்டகாலம் எடுக்ககூடியந நடவடிக்கை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் பழைய மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தினை திருத்தங்களுடன் சமர்ப்பித்து நிறைவேற்றினால் அதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.