கரப்பந்தாட்ட போட்டியில் கரைதுறைப்பற்று பிரதேச அணிகள் வெற்றி வாகை சூடின!

received 469421597632868
received 469421597632868

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 34 ஆவது ரூபவாகினி கரப்பந்தாட்ட சுற்று போட்டி நேற்று(10) ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது

received 893787651164428

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து குறித்த போட்டியினை ஏற்பாடு செய்திருந்தனர் குறித்த போட்டியில் ஆண்கள் அணியில் 11 அணிகளும் பெண்கள்  அணியில் 04 அணிகளும் கலந்து கொண்டு போட்டிகளில் ஈடுபட்டிருந்தனர்

received 480347493163684

இந்நிலையில் பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் இறுதிப்போட்டிக்கு கரைதுறைப்பற்று பிரதேச அணியும்  துணுக்காய் பிரதேச அணியும்  தெரிவாகி  இருந்தது இதனடிப்படையில் இறுதிப்போட்டியில் கரைதுறைப்பற்று பிரதேச அணி துணுக்காய்  அணியை வீழ்த்தி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது இதன் அடிப்படையில் இறுதிப் போட்டியில்  முதலாவது இடத்தை பெற்றுக்கொண்ட கரைதுறைப்பற்று பெண்கள் அணிக்கு 7500 ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட துணுக்காய்  பிரதேச பெண்கள் அணிக்கு 5000 ரூபாய் பணப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது

received 797224424530661

அதேபோன்று ஆண்களுக்கான போட்டியிலே கரைத்துறைப்பற்று பிரதேச அணியும் மணலாறு பிரதேச அணியும்  இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்தன இதனடிப்படையில் இறுதிப்போட்டியில் கரைதுறைப்பற்று பிரதேச அணி மணலாறு அணியை வீழ்த்தி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது இதன் அடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச அணி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு 7500 ரூபா பண பரிசினையும் மணலாறு அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு ஐயாயிரம் ரூபா பணத்தையும் பெற்றுக் கொண்டனர்

received 835216780674732

நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கான பணப் பரிசில்களை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்   முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி சறோஜா குகநேசதாசன்  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார் இளைஞர் சேவை அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் தனுஷன் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின்  விளையாட்டு செயலாளர் நிஷாக்  மற்றும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் கழக  தேசிய சம்மேளன பிரதிநிதி பூஜிதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இவர்களுக்கான காசோலைகளை வழங்கி கௌரவித்தனர்