பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நியுஸிலாந்து அணியின் விக்கட் காப்பாளர் டொம் பிளன்டல் விலகியுள்ளார்.
பங்களாதேஸ் அணியுடன் இடம்பெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 4வது போட்டியில் அவரது இடது கணுக்காலில் உபாதை ஏற்பட்டிருந்தது.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் டொம் பிளன்டல் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டொம் பிளன்டலுக்கு பதிலாக நியுஸிலாந்து அணியின் டேரல் மிச்சல் இணைத்துக் கொள்ளப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.