இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு

Bowser 2 1
Bowser 2 1

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (22) நிறைவுபெற்றது.

போட்டியில் தமது முதலாவது இனிங்ஸ்க்காகத் துடுப்பாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

முன்னதாக தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் திமுத் கருணாரட்ன 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.