தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் சுறா.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து தமன்னா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தளபதி விஜய்யின் 50வது படம் என்பதினால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யாமல், தோல்வியை தழுவியது.
இந்நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து தோல்வியடைந்த சுறா திரைப்படம் முழுமையாக ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.
கிட்டத்தட்ட 18 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.