சீனரின் சுகாதார நிலையை கண்காணிக்க மொபைல் செயலி!

1 d 1
1 d 1

இலங்கைக்கு வரும் சீன நாட்டினரின் வருகையை அறியவும், அவர்களின் சுகாதார நிலையை கண்காணிக்கவும் சுகாதார அமைச்சு மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை வழக்கமாக ஒரு நாளைக்கு 800 முதல் 1,200 சீன சுற்றுலாப் பயணிகளைப் பெறுகிறது, ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 10 முதல் 15 வரை வெகுவாக குறைந்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை வரும் சீனர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சீன பிரஜைகள் இலங்கையில் அவர்கள் பயன்படுத்தும் மொபைல் தொலைபேசி எண்களை குறித்த செயலியில் வழங்க வேண்டும்.

இதன்மூலம், மருத்துவ சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள், குறித்த பாவனையாளர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, செயலியின் உதவியுடன் அவர்களின் உடல்நிலையை சரிபார்க்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதையொட்டி, சுகாதார அதிகாரிகள் குறித்த நபரின் இருப்பிடத்தைப் பார்வையிடலாம் அல்லது பாவனையாளர்களின் தொலைபேசியில் அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்யச் சொல்லும் செய்தியை அனுப்ப முடியும்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு எம் .ஓ .எச் அல்லது பி.எச் .ஐ உதவியை நாடலாம்.

இதற்கிடையில், சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பெரும் வீழ்ச்சி குறித்து குடிவரவுத் துறையிலிருந்து சுகாதார அமைச்சுக்கு அறிக்கை கிடைத்துள்ளது.

தற்போது, ​​நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் அவர்களின் உடல்நிலை குறித்து சுய அறிவிப்பு செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.