இரண்டாவது மாணவனுக்கும் இடைக்கால தடை

1 yt
1 yt

யாழ். பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீட்டத்தில் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மற்றுமொரு மாணவனுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் இடைக்கால தடை விதித்துள்ளது.

யாழ். பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீட்டத்தில் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மற்றுமொரு மாணவனுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பகிடிவதை என்ற பெயரில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட இரண்டாவது சிரேஷ்ட மாணவன் இனம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடவும், பல்கலைகழகத்திற்குள் நுழையவும் பல்கலைகழக நிா்வாகத்தினால் நேற்று முதல் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பகிடிவதை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணை மேற்கொண்டு வந்த ஒழுக்காற்று குழு விசாரணைகளின் அறிக்கையின் அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது எடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் மீதான தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பகிடிவதை தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் மேலும் சில மாணவர்களுக்கு உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைவதற்கான இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக்கு உள்ளாகுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியான பகிடிவதை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏற்கனவே மாணவன் ஒருவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிடிவதை என்ற பெயரில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட இரண்டாவது சிரேஷ்ட மாணவன் இனம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடவும், பல்கலைகழகத்திற்குள் நுழையவும் பல்கலைகழக நிா்வாகத்தினால் நேற்று முதல் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பகிடிவதை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணை மேற்கொண்டு வந்த ஒழுக்காற்று குழு விசாரணைகளின் அறிக்கையின் அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது எடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் மீதான தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான (Out of Bounds) இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பகிடிவதை தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் மேலும் சில மாணவர்களுக்கு உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம்

சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.