தமிழரசு கட்சி மகளிர் அணி குழம்பியது – சுமந்திரன் மழுப்பல்

76
76

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் களமிறக்கப்பட்டுள்ளது கட்சியின் யாழ்ப்பாணத்து பெண்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் இன்று கூட்டாக கட்சித் தலைமையை சந்தித்து தமது ஆட்சேபனையை தெரிவித்தனர்.

இன்று பகல் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து அவர்கள் தமது அதிருப்தியை தெரிவித்தனர்.

இதனால் தன்னை சுதாகரித்துக்கொண்ட சுமந்திரன் வேட்பாளர்கள் பட்டியல் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்து மகளீர் அணியினரை சமாளித்து அனுப்பியுள்ளார் .

இதில் அம்பிகாவை சுமந்திரன் தெரிவு செய்திருந்தாலும், ரவிராஜியின் மனைவியான ஆசிரியை சகிக்கலாவை கட்சியின் தலைவரான மாவை சேனாதிராயாவே தெரிவு செய்து அவரை ஆசிரியர் பணியில் இருந்தும் ஓய்வு பெற செய்தவராவார் .

இரண்டு பெண்களும் தமது பணிகளை நிராகரித்து தேர்தலில் களமிறங்க காத்திருப்பதால் ,சுமந்திரன் கூறுவதுபோல் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை என்பது முழுமையான பொய் ஆகும்.

எனவே யாழ்ப்பாண மகளிர் அணியினரை சமாளிப்பதற்காகவே சுமந்திரன் இவ்வாறு பொய்கூறி அவர்களை அனுப்பியுள்ளார் என்று கட்சியின் பெண் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

இதனைவிட மட்டக்களப்பில் தெரிவாகி இருக்கும் நளினி ரட்ணராஜா தன்மேல் சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் புகார்கள் தொடர்பில் கடுமையான மன உழைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், இதுதொடர்பில் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் நிலைப்பாடுட்டை கூறி ஆறுதல் தேட விளைவதாகவும் கூறப்படுகிறது .

எதற்கும் பயப்படாமல் தைரியமாக இருக்கும்படி சுமந்திரன் நளினிக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன .