அமெரிக்க மக்களை வீடுகளில் அடைக்க முடியாது – ஜோ பிடெனுக்கு டொனால்ட் ட்ரம்ப் பதிலடி!

பொதுமக்கள் கொரோனா வைரஸால் இறப்பதாக ஜோ பிடன் கூறியதற்கு , அமெரிக்க மக்களை வீடுகளில் அடைக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூன்று முறை நேருக்கு நேர் விவாதிப்பது அமெரிக்காவிலுள்ள மரபாகும்.

அந்தவகையில் இத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோ பிடனும் (Joe Biden) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் (Donald Trump) நாஷ்விலில் இறுதிக்கட்ட விவாதத்தை மேற்கொண்டிருந்தனர்.

இவ் விவாதத்தின் போது ட்ரம்ப் கொரோனத் தொற்றைக் கையாண்ட விதம் குறித்து ஜோ பிடன் விமர்சிக்க, கொரோனாவை தாம் கொண்டு வரவில்லை என ட்ரம்ப் பதிலடி கொடுத்தார்.

மேலும் சீனாவிலிருந்து வந்த கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் நாட்டை மீண்டும் திறக்கவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்ததையும் ட்ரம்ப் விளக்கினார்.

இதனையடுத்து பொதுமக்கள் வைரஸால் இறப்பதாக பைடன் கூறியதற்கு பதிலடி கொடுத்த ட்ரம்ப், அமெரிக்க மக்களை வீடுகளில் அடைக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.