ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது தமக்கு அதீத நம்பிக்கை உண்டு -அமைச்சர் விமல் வீரவன்ச!

1528895057 Wimal 2
1528895057 Wimal 2

அமைச்சர் விமல் வீரவன்ச மீண்டுமொருமுறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இம்முறை அவரின் அறிவிப்புக்கு கிடைத்த தகவல் அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கை.

அதாவது அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடும் எந்தவொரு அரசாங்கத்திலும் தான் இருக்கப்போவதில்லை என்பதே அவரது அறிவிப்பாகும்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின்போது எம்.சி.சி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என்றும் அதனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது தமக்கு அதீத நம்பிக்கை இருப்பதாகவும், ஆகவேதான் பொம்பியோவின் இலங்கை விஜயத்தை தாம் முன்புபோல எதிர்க்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை 20 ஆவது திருத்த சட்டத்தில் இரட்டை குடியுரிமை நீக்கப்படவேண்டுமென கடுமையாக கருத்து தெரிவத்துவந்த விமல் வீரவன்ச, வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதல்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைத்து பேசிய நிலையில் பெட்டிப்பாம்பாக அடங்கியமையும் குறிப்பிடத்தக்கது.