அபுதாபியில் மினா சையது துறைமுகப்பகுதியை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரக அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற மினா பிளாசா டவர்ஸை தகர்க்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து, 6 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் கொண்டு 144 தளங்கள் கொண்ட 4 கட்டடங்கள் நேற்றைய தினம் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டன.
சுமார் 165 மீற்றர் உயரம் கொண்ட குறித்த பிரமாண்டக் கட்டிடங்கள் பத்தே நொடிகளில் இடிந்து தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.