சேது தான் மீண்டும் உங்களுக்கு மகனாக பிறந்துள்ளார் -நெகிழ்ச்சியில் ரசிகர்கள்

unnamed 4
unnamed 4

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சேது. இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் கூட.

இவர் வாலிபராஜா என்ற படத்திலும் நடித்தார், அது மட்டுமின்றி சந்தானத்துடன் ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றார்.

இப்படி தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் சில படங்களில் நடித்து வந்தார் சேது.

இவர் நடிகர் என்பதை தாண்டி மருத்துவர், இவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் முடியாமல் இறந்தார்.

இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நேரத்தில் அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தார்.

தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, இந்த நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ரசிகர்கள் பலரும் சேது தான் மீண்டும் உங்களுக்கு மகனாக பிறந்துள்ளார் குட்டி சேது தான் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.