சட்டவிரோதமாக பயணித்த மூன்று சொகுசு பேருந்துக்கள்!

132241
132241

வீதி அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பயணித்த மூன்று சொகுசு பேருந்துக்கள் காவல்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் இரு பேருந்துக்களும் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பேருந்து ஒன்றும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சொகுசு பேருந்து ஒன்று ஓமந்தை பிரதேசத்தில் விபத்துக்குள்ளான நிலையில் குறித்த பேருந்து சட்டவிரோத முறையில் பயணித்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு (30) சட்ட விரோத பேருந்துக்கள் பயணிப்பது குறித்து விசேட சுற்றிவளைப்புக்கள் எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.