போதை பொருள் வியாபாரிகளுடன் தொடர்பினை முன்னெடுத்த குற்றச்சாட்டில்!

download 14 1
download 14 1

ஹெரோயின் போதை பொருள் வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவு உப காவல்துறை பரிசோதகர் வீட்டில் இருந்து பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கமைய 9 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தொகை உட்பட சிற்றூந்து, உந்துருளி, கூரிய ஆயுதம் மற்றும் நான்கு கடன் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காவற்துறை உத்தியோகத்தரின் மினுவங்கொடையில் உள்ள வீட்டிலிருந்து இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை பொருள் வியாபாரிகளுடன் தொடர்பினை முன்னெடுத்த குற்றச்சாட்டில் காவற்துறை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் (04) பேர் உட்பட (05) பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்குற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.