ஊரடங்கு சட்டத்தினை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை!

வீரவன்ச
வீரவன்ச

சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தினை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றின் அச்சம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பரவலாக பொது மக்களால் பேசப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விமல்,

“பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அறிவிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை.

சர்வதேச விமானநிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தினை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் திட்டமிடப்பட்ட முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்படும் தருணம் இது” என தெரிவித்துள்ளார்.