சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / இன்று ஹஜ் பெருநாள்!
MECCA HAJJ RAMADAN 696x348 1

இன்று ஹஜ் பெருநாள்!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்கள் இன்று ஹஜ் பெருநாளை கொண்டாடுகிறார்கள்.

சவூதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டு இன்றைய தினத்தில் ஹஜ் வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம்.

கொரோனா தாக்கத்திற்கு முன்னர், உலகெங்கிலும் இருந்து சுமார் மூன்று மில்லியன் வெள்ளை உடையணிந்த யாத்ரீகர்கள் ஹஜ்ஜில் கலந்து கொள்வதற்காக இஸ்லாத்தின் புனிதமான தளங்களுக்கு திரண்டனர்.

இந்த ஆண்டு, கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நவீன வரலாற்றில் முதல்முறையாக, சமூக தொலைதூர நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கையை வியத்தகு முறையில் குறைத்துள்ளது.

ஹஜ் பண்டிகையை குறித்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்ட வாழ்த்தில்,

இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ள தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இப்றாஹீம் நபி அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இறைவனுக்காக மேற்கொண்ட பெரும் அர்ப்பணிப்புகளை நினைவுகூர்ந்து உலக வாழ் முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இத்திருநாளை கொண்டாடுகின்றனர்.

இக்காலப்பகுதியிலேயே உலகெங்கிலும் இருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான ஹஜ் கடமைக்காக மக்காவில் ஒன்று சேர்கின்றனர்.

முழு உலகையும் ஆட்கொண்டிருக்கும் கொவிட்- 19 நோய்த் தொற்றுக்கு மத்தியில் இம்முறை வழமை போன்று மக்காவுக்கான யாத்திரைக்கு முஸ்லிம்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத போதும், அந்த யாத்திரையின் மூலம் வெளிப்படுத்தப்படும் இறைவனுடனான நெருக்கத்தையும் சமூக ஐக்கியத்தையும் மேலும் வளர்த்துக்கொள்வதற்கு இந்த நன்னாள் உதவும் என்று எண்ணுகின்றேன்.

ஹஜ்ஜின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு இலங்கை அரசாங்கமானது இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் அவர்களுடைய சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.

புனித அல்குர்ஆனின் போதனைகளின் வழி நின்று வரலாறு நெடுகிலும் ஏனைய அனைத்து சமூகங்களுடனும் ஐக்கியமாக வாழ்ந்து வரும் எமது நாட்டு முஸ்லிம்கள் எமது தேசத்தின் சுபீட்சத்திற்காக வழங்கிவரும் பங்களிப்புகள் எதிர்காலத்திலும் தொடரும் என நான் நம்புகிறேன்.

இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

x

Check Also

@@ 2

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைவு!

இன்றைய தினம் மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு ...