சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / தேர்தலில் வெற்றி பெற்றால் பிள்ளையானுக்கு அமைச்சுப் பதவி?
1567171241 SLPP 2

தேர்தலில் வெற்றி பெற்றால் பிள்ளையானுக்கு அமைச்சுப் பதவி?

நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)  வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வாக்குறுதியளித்துள்ளது.

இந்தத் தகவலை பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், அவர் சிறையிலிருந்து பிணையில் விடுதலையானால் மாத்திரமே அமைச்சுப் பதவியை வழங்க முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த பிள்ளையான் தற்போது சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிள்ளையானைத் தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதன் மூலம் அவருக்கு அமைச்சுப் பதவி கிடைப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்று அவரின் சகா ஒருவர் தெரிவித்துள்ளார்.

x

Check Also

against provincial council system in sri lanka

பதுளை மாவட்டத்தில் இரு தமிழர்கள் வெற்றி!

செந்தில் தொண்டமான் தோல்வி பதுளை மாவட்டத்தில் கடந்த முறை மாதிரி இம்முறையும் இரு தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் ...