சிறுபான்மைக் கட்சிகள் சிந்திக்க வேண்டும்

ad
ad

வெட்டினாலும் பச்சை நிறத்திலேயே இரத்தம் ஓடும் என்று உறுதியாக இருந்தவர்கள் இன்று ஐ.தே க .வில் எந்த நன்மையும் இல்லை என்பதை உணர்ந்துள்ளதாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்துடன் கைகோர்ப்பதுதான் சிறந்தது எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வங்குறோத்து அடைந்துள்ள கட்சிகளுடன் அரசியல் செய்யாமல், பாரிய வளர்ச்சியை நோக்கி சிறந்த முறையில் நாட்டை வழிநடத்திச் செல்லக் கூடிய புதிய அரசாங்கத்துடன் ஏனைய சிறுபான்மை கட்சிகளும் இணைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நேற்று கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி 1994 இல் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் 2015 ல் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நாட்டிற்கு சேவை செய்யவில்லை என்பதே உண்மை.

ஐ.தே.கட்சியின்  ஆட்சிக் காலத்தில்தான் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை இல்லாத ஒரு நிலையே இருந்தது. கடன் மற்றும் வரிச்சுமைகள் மட்டுமன்றி முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

ஜனாதிபதித் தேர்தலில் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தது 40 இலட்சம் வாக்குகளாவது கிடைக்குமா என்று நம்புவதும் கடினமாகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.