இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு நாடாளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கான அனுமதி – சு.க கலந்துரையாடல்!

434480242slfp 415x260 1
434480242slfp 415x260 1

20 ஆம் திருத்தத்தின் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான ஷரத்துக்கு இணங்குவதா இல்லையாஎன்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்த குறைநிரப்பு பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு நாடாளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கான ஷரத்து தொடர்பில்
கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

20 ஆம் திருத்தத்தின் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான ஷரத்துக்கு இணங்குவதா இல்லையா என்பது குறித்து இதன் போது தீர்மானம் எட்டப்படவுள்ளது.

மேலும் இரட்டைப் பிரஜாவுரிமை ஒருவருக்கு தமது நாடு மீதான பற்றினை இல்லாமலாக்கும் என்பதுடன் அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் இரட்டை பிரஜாவுரிமையுடையவர்களுக்கு நாடாளுமன்ற செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அது தமது தனிப்பட்ட கருத்தாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.