கண்காணிப்பாளர்களை சந்திக்கும் குழு

5 nju
5 nju

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க மேலதிகமாக சுமார் 17 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்தியா, பூட்டான், மாலைதீவு, தென்கொரியா, தென்னாபிரிக்கா, பிலிபைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களே நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

அவர்கள் தேர்தல் முடிவடைந்து மேலும் ஒருவார காலத்திற்கு நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 200க்கும் அதிகமான வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.