பஷில் ராஜபக்ஷ தெரிவித்த நன்றி

6 BR
6 BR

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அதன் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எத்தரப்பினருக்கும் ஆதரவு  வழங்காமல் நடுநிலையாக செயற்பட்டு சுயாதீனமான தேர்தலை  நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வழிமுறைகளை  ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அதேபோன்று, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களும்  சுயாதீனமான முறையில் செயற்பட்டுள்ளமைக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற ரீதியிலும் , தனிப்பட்ட ரீதியிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பு – கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.