ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதிவியிலிருந்து விலகினார் முன்னாள் கல்வி அமைச்சர்!

காரியவசம்
காரியவசம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மத்திய செயற்குழு கூடியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இறுதித் தீர்மானம் எட்டப்படும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கட்சியின் பொதுச் செயலாளர் பதிவியில் இருந்து அகிலவிராஜ் காரியவசம் இராஜினாமா செய்துள்ளார்.