ஜனாதிபதிக்கு நெருக்கமான தமிழ் அதிகாரியே வடக்கு ஆளுநர்!

ulloor arasiyal 2
ulloor arasiyal 2

இழுபறி மட்டுமல்ல சகோதரர்களிடையே முரணையும் ஏற்படுத்தி வந்தது வடக்கு மாகாண ஆளுநர் விவகாரம். இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எனத் தெரிகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான அதிகாரியாக செயற்பட்ட திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் நியமிக்கப்படவுள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களின் மூலம் செய்திகள் கசிந்துள்ளன.

வன்னி இறுதிப்போர் காலத்தில் வவுனியா மாவட்ட அரச அதிபராக செயற்பட்டவர் திருமதி சாள்ஸ். இறுதிப் போர் சமயத்திலும், அதன் பின்னரான மக்கள் அரசிடம் சரணடைந்த விடயத்திலும் அரசாங்கத்துக்கு பல விதங்களில் உதவியவர் சாள்ஸ்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது இராணுவத்திற்கு பல உதவி ஒத்தாசைகளை திருமதி சாள்ஸ் வழங்கியிருந்தார். பின்னாளில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றமைக்கு அன்றைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்சவின் சிபாரிசும் காரணமானது.

இந்நிலையில், திருமதி சாள்ஸ் இந்த வாரம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதனால், அவரையே வடக்கு ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளாராம் என்கின்றன தகவல்கள்.