தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்துவதற்கு அனுமதி

Keheliya Rambukwella
Keheliya Rambukwella

நாட்டின் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 350 தேசிய பாடசாலைகள் உள்ளன, இந்த எண்ணிக்கை மூன்று கட்டங்களாக 1,000 ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த திட்டம் மூன்று கட்டங்களாகச் செயல் படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டத்தின் கீழ், தற்போது தேசிய பாடசாலைகள் இல்லாத 123 பிரதேச செயலக பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு மாகாண சபை பாடசாலைகளைத் தெரிவு செய்யப்பட்டு தேசிய பாடசாலைகளாக உருவாக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போது தேசிய பாடசாலைகளாக இருக்கும் 373 பாடசாலைகளின் மேம்பாடு இந்த திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.