சற்று முன்னர் விடுவிக்கப்பட்ட உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு!

road 1
road 1

நேற்று இரவு முதல் தற்காலிகமாக முடக்கப்பட்ட உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையினரின் ஆலோசனைக்கு அமைவாக இவ்வாறு முடக்கல் நிலை நீக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட உடுவில் மற்றும் தெல்லிப்பளை கல்விக் கோட்டங்களுக்குற்பட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படும் எனவும், கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார்.