கொரோனா ஆபத்து சூழலில் மாகாண சபை தேர்தல் ஏன்? – எல்லே குணவன்ச தேரர் கேள்வி

elle
elle

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் பெருந்துயரம் மற்றும் நெருக்கடிகளின் மத்தியில் வாழ்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள எல்லே குணவன்ச தேரர், இந்த தருணத்தில் தேர்தல்களை நடத்துவது அரச முதலீட்டை வீணடிக்கும் மற்றுமொரு செயலாக அமையும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஆபத்து நிலவுகின்ற சூழலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது மக்கள் கேட்கும் தேர்தல் இல்லை என தெரிவித்துள்ள அவர், மக்கள் நிராகரித்துள்ள மாகாணசபைக்கான தேர்தல்களை நடத்துவது அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கான முயற்சியாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்கள் கூட தேர்தலை நடத்துமாறு கோரவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.