யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு களமிறங்கவுள்ள மணிவண்ணன்!

manivannan 1 1
manivannan 1 1

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த தகவலை சட்டத்தரணி வி.மணிவண்ணன் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிகை மூலம் தெரிவித்துள்ளார்.

இரண்டு தடவைகள் மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்ததால் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட் தனது பதவியை இழந்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் தெரிவுக்கு மீண்டும் முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் போட்டியிடுவதால், எதிர்காலத்தில் சபை கலையக்கூடிய சாத்தியம் கானப்படுவதால், தான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

அத்தோடு யாழ்.மாநகர சபையில் ஒரு நிலையான மற்றும் சிறப்பான ஆட்சியை அமைக்கவேண்டிய தேவை காணப்படுவதால், சபையில் அங்கம் வகிக்கும் 45 உறுப்பினர்களுடைய ஆதரவையும் எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் முதல்வர் தெரிவு நாளை காலை ஒன்பது மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.