கொரோனாவை கட்டுப்படுத்திய பின்னரே மாகாண சபை தேர்தல் நடைபெறும் – உதய கம்மன்பில

download 2 2
download 2 2

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்திய பின்னரே மாகாணசபை தேர்தல்கள் நடத்துவது குறித்து ஆராய முடியும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது பொருத்தமற்ற விடயம் என ஆளும் கூட்டணியின் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதும் இது குறித்து ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.